Advertisement

இறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் ! Trending ஊர் தலைவர்

பொது பிப்ரவரி 26,2020 | 17:35 IST

Share

உத்தர பிரதேசம் , உன்னாவ் மாவட்டத்துல சிர்வார்யா கிராமத்த சேந்தவரரு லஷ்மி ஷங்கர். ரொம்ப வயசானவரு. ஒடம்பு சரியில்லாம போனதால , போன மாசம் ஜனவரி 22 அனிக்கு இறந்துட்டாரு. அப்பாவுக்கு டெத் சரிடிபிகேட் ரெடி பன்னி கொடுங்கன்னு ஊர் தலைவர் கிட்ட லஷ்மி ஷங்கரரோட மகன் கேட்டாரு. ஊர் தலைவர் பாபுலாலும் , டெத் விவரத்தை கேட்டு சர்டிபிகேட்ட கொடுத்தாரு. அத வாங்கி படிச்ச அப்ப , லஷ்மி ஷங்கர் இறந்த விவரமெல்லாம் கர்ட்டா இருந்துச்சு. ஆனா கடைசி லைன்ல , ”இறந்து போனவரோட எதிர்காலம் பிரகாசமாக இருக்க என் வாழ்த்துக்கள்”ன்னு ஊர் தலைவர் எழுதி இருந்தத மகன் படிச்சாரு. அதுக்கு அப்றம் அவர் எப்டி ரியாக்ட் பன்னி இருப்பார்ன்னு நீங்களே கற்பன பன்னிக்கோங்க. நல்லது செஞ்சி டிரெண்ட் ஆன ஊர் தலைவர் மத்தியில, டெத் சர்டிபிகேட்ல , இறந்து போனவர் வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னு எழுதி டிரெண்ட் ஆனா ஊர் தலைவர் பாபுவ பாத்து எத்தன பேர் பொறாம படுறாங்களோ..


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X