Advertisement

வாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது

பொது பிப்ரவரி 26,2020 | 00:00 IST

Share

சேலத்தில் சமூக ஆர்வலர் எனக் கூறிக்கொள்ளும் பியூஸ் மானுஷ் கொண்டப்பநாயக்கன்பட்டியில் ஆஷாகுமாரி என்பவரின் வீட்டில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு தங்கியுள்ளார். ஆஷாகுமாரியின் கணவர் இறந்துவிட்டதால், சொந்த வீட்டில் குடியேற விரும்பிய அவர், பியூஸ் மானுைஷ காலி செய்யக்கூறியுள்ளார். ஆனால், ஓராண்டாக வீட்டை காலி செய்ய மறுத்த பியூஸ், வாடகை தராமலும் போக்கு காட்டி வந்துள்ளார். இதனால், மாவட்ட கலெக்டர் மற்றும் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் ஆஷாகுமாரி புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், வீட்டை அபகரிக்கும் நோக்கில், காலி செய்ய மறுத்திருப்பதும், வீட்டு உரிமையாளரை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண் வன்கொடுமை, தகாத வார்த்தையில் திட்டுதல், காயங்கள் ஏற்படுதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் போர்வையில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தியாக பியூஸ் மீது ஏற்கனவே 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X