Advertisement

உங்களுக்கும் பொறுப்பு உள்ளது கமல்: லைகா பதில்

சினிமா வீடியோ பிப்ரவரி 27,2020 | 18:00 IST

Share

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‛இந்தியன் 2' படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர். லைகா நிறுவனத்திற்கு கமல் எழுதிய கடிதத்தில், ‛‛நாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் செய்ய வேண்டும். விபத்திற்கு தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள லைகா, உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த அனைத்து ஏற்பாடுகள் செய்தோம். அவர்களின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் உலகதரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட நிறுவனம். இந்த விபத்து எதிர்பாராமல் நடந்தது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் பொறுப்பு உள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்த கலைஞர்களான நீங்களும், ஷங்கரும் தான் படப்பிடிப்பு தளத்தில் கேப்டன் ஆப் தி ஷிப்பாக இருந்தீர்கள். படப்பிடிப்பு தளத்தில் அனைத்து ஊழியர்கள், கலைஞர்களுக்கும் தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X