Advertisement

தென்னை தொழிலை தாக்கிய கொரோனா

பொது பிப்ரவரி 28,2020 | 00:00 IST

Share

இந்தியாவின், மொத்தத் தென்னை நார் உற்பத்தியில், 50 சதவீதம் கோவை, பொள்ளாச்சியில் உற்பத்தியாகிறது. பொள்ளாச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தென்னை நார்களில் 90 சதவீதம் சீனாவிற்குதான் செல்கிறது. அங்கு அவை, மெத்தை, கால்மிதி, அணிகலன்கள் மற்றும் பொம்மைகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஜனவரியில், சீன புத்தாண்டிற்காக அங்குள்ள தொழில்நிறுவனங்களுக்கு விடுமுறையளிக்கப்பட்டது. அதன்பின், கொரோனா பாதிப்பால் தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை. இதனால், பொள்ளாச்சியில் இருந்து அனுப்பப்பட்ட தென்னை நார்கள் சீனத் துறைமுகங்களில் தேங்கியுள்ளன. ஜனவரி மாதத்திற்கு முன் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தென்னை நார்களுக்கான தொகையும் உற்பத்தியாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்த காரணங்களால் சுமார் 1400 கோடி ரூபாய் அளவிற்கு தென்னை நார் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இயங்கிவரும் பெரும்பாலான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X