Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 28,2020 | 18:00 IST

Share

எழுச்சி பெறுமா இந்தியா இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், பிப்ரவரி 29ம் தேதி கிறைஸ்ட்சர்ச், ஹாக்லே ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, இதில் வென்றால் மட்டுமே தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்ப முடியும் என்பதால், இந்திய வீரர்கள் எழுச்சி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. --------------------- சென்னை-கோவா பலப்பரீட்சை ஐ.எஸ்.எல்., தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்து பிப்ரவரி 29 முதல் அரையிறுதி 'பிளே ஆப்' போட்டிகள் துவங்குகின்றன. சென்னையில் நடக்கும் அரையிறுதி முதல் சுற்று போட்டியில் சென்னை, கோவா அணிகள் மோதுகின்றன. சொந்த மண்ணில் சென்னை அணி சாதித்து, பைனல் வாய்ப்பை அதிகப்படுத்தும் என நம்பப்படுகிறது. --------------------- இந்தியா-இலங்கை மோதல் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் மூன்று போட்டியில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. பிப்ரவரி 29ம் தேதி நடக்கும் தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. இந்தியா மீண்டும் சாதித்து நான்காவது வெற்றியை பதிவு செய்யும் எனத் தெரிகிறது. ---------------------- இந்தியா-தஜிகிஸ்தான் சவால் இந்தியா, தஜிகிஸ்தான் அணிகள் மோதும் நட்பு கால்பந்து போட்டி வரும் மார்ச் 31ம் தேதி தஜிகிஸ்தானில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கான இடம், நேரம் பின்னர் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு கண்டங்களுக்கு இடையில், ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்று, பின் 2-4 என தஜிகிஸ்தானிடம் வீழ்ந்தது. இம்முறை வெற்றிக்கு முயற்சிக்கும் என பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாச் கூறினார். -----------------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X