Advertisement

அமைதியை நிலைநாட்ட முயற்சி; முஸ்லிம்களிடம் ரஜினி உறுதி

பொது மார்ச் 01,2020 | 15:32 IST

Share

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை; முஸ்லிம்களை கட்சிகள் தூண்டுகின்றன. இதற்கு மதகுருமார்கள் துணை போகிறார்கள் என, நடிகர் ரஜினி கூறியிருந்தார். ரஜினியின் கருத்துக்கு, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வருத்தம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஜமாஅத்துல் உலமா சபையினரை சந்திக்க ரஜினியை விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி ஜமாஅத்துல் உலமா சபையின் ஐந்து மதகுருமார்கள் ரஜினியை நேரில் சந்தித்து விளக்கமளித்தனர். அதன்பிறகு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் காஜா மொயீனுத்தீன் பாகவி கூறுகையில், குடியுரிமை சட்ட விவகாரத்தில் நாட்டில் அமைதியை மீட்டெடுக்க தன்னால் ஆனதை செய்வதாக ரஜினி உறுதியளித்தார் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X