Advertisement

ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் உடல் நசுங்கி பலி

சம்பவம் மார்ச் 01,2020 | 16:15 IST

Share

மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிய ஒரு சரக்கு ரயில் உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்டது. சிங்ரவுலி Singrauli மாவட்டத்தில் ஞாயிறு காலை ரயில் சென்றபோது இன்னொரு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. 13 பெட்டிகள், ஒரு இன்ஜின் தடம்புரண்டு தாறுமாறாக கிடந்தன. இந்த பயங்கர விபத்தில் இரு ரயில்களின் டிரைவர்கள், பாய்ண்ட்ஸ்மேன் என மூவர் உயிரிழந்தனர். விபத்து நடந்த ரயில் தடம், தேசிய அனல்மின் கழகத்துக்கு சொந்தமானது. ஒரே தடத்தில் இரு ரயில்களை அனுமதித்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X