Advertisement

காளை முட்டி ஒருவர் பலி: 2 மாடுகளும் இறந்தன

சம்பவம் மார்ச் 01,2020 | 00:00 IST

Share

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை, மல்லிகார்ஜுன துர்க்கம் கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிறன்று எருதாட்டம் நடைபெற்றது, 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து, அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் மற்றும் அலங்கார தட்டிகளை பறித்து மாடுகளை அடக்கினர். இதில், காளை ஒன்று முட்டி, உதைத்து தள்ளியதில் கேரட்டி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் உயிரிழந்தார். அந்த காளை திரும்பி ஓடும்போது, எதிரே வேகமாக வந்த காளையுடன் நேருக்கு நேர் மோதியதில், அந்த இரு காளைகளும் உயிரிழந்தன. பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்து காளைகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X