Advertisement

மனைவியை கொன்றவர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சம்பவம் மார்ச் 02,2020 | 00:00 IST

Share

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையை அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்த சக்திவேலு, கேரளாவில் தங்கியிருந்து ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றிவந்தார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாககூறி மனைவி நந்தினி அடிக்கடி வாக்குவாதம் செய்துவந்ததால் தம்பதிக்குள் குடும்ப சண்டை நீடித்து வந்துள்ளது. ஞாயிறன்று சண்டை முற்றியதில், ஆத்திரமடைந்த சக்திவேல், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின், தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீது தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த சக்திவேல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தெரியாமல் மருத்துவமனையின் 5 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X