Advertisement

ஆலைகளுக்கு ஆதரவாக கேன் குடிநீர் சப்ளை நிறுத்தம்

பொது மார்ச் 02,2020 | 00:00 IST

Share

தமிழகத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் கேன் குடிநீர் ஆலைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் விதி மீறி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் 30க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விதிமுறைகளை தளர்த்தி ஆலைநடத்த அனுமதி வழங்க கோரி, சேலம் மண்டல தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சேலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர் நலச் சங்கம் கேன் குடிநீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. குடிநீர் சப்ளை செய்யும் மினி வேன்கள், ஆட்டோக்கள் காலி கேன்களுடன் ஜாகீர் அம்மாபாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், கடைகள், வீடுகள் நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X