Advertisement

அதிகாரிகளை வைத்து பூட்டிய பாமகவினர்

பொது மார்ச் 02,2020 | 00:00 IST

Share

அரியலூர் மாவட்டம் செந்துறை வேளாண்மை துறை அலுவலகத்தில், அதிமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ், என்பவர், அட்மா திட்ட தலைவராக இரண்டாண்டுகளாக இருந்து வருகிறார். இந்தத் திட்டத்தின் தலைவர், ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே, புதிய தலைவரை நியமிக்க கோரி, பாமக மாவட்ட செயலாளர் உலக சாமிதுரை, தலைமையில், பா.ம.க.வினர், வேளாண் உதவி இயக்குனரிடம் கோரிக்கை விடுத்தனர். அவர் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறி, பாமகவினர், அதிகாரிகளை உள்ளே வைத்து, அலுவலகத்தை பூட்டி சிறை வைத்தனர். செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், போராட்டக்காரர்களை சமரசம் செய்து பூட்டை திறந்து, அலுவலர்களை விடுவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X