Advertisement

யானை தாக்கி வனஊழியர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

சம்பவம் மார்ச் 03,2020 | 00:00 IST

Share

கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி அருகே தமிழக - கர்நாடக எல்லை வனத்தில் இருந்து வெளியேறிய 35 காட்டு யானைகள் பூதுகுட்டா கிராமத்தில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. அந்த யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும், சப்தம் எழுப்பியும் வனத்துறையினர் விரட்ட முயன்றனர். அப்போது, யானைக்கூட்டத்தில் இருந்து ஆக்ரோஷமாக ஓடிவந்த ஒரு காட்டுயானை வனத்துறையினரை விடாமல் விரட்டியது. பூதுகுட்டா கிராமத்தை சேர்ந்த வன ஊழியர் குத்த முனியப்பாவை யானை தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அங்கு விவசாயநிலத்தில் இருந்த விவசாயியையும் காட்டு யானை தாக்கியதில் அவரும் உயிரிழந்தார். யானைத்தாக்கி இருவர் உயிரிழந்தது கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X