Advertisement

3வது முறையாக மறைமுக தேர்தல் ரத்து

பொது மார்ச் 04,2020 | 00:00 IST

Share

திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்டராம்பட்டு யூனியனில், அ.தி.மு.க. 11, தி.மு.க. 14, அ.ம.மு.க. 2, காங்., 1, என, 28 வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜன., 11ல், நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அன்று, தி.மு.க., பெரும்பான்மை இருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அறைக்கு, தி.மு.க., உறுப்பினர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே செல்லவிடாமல், அ.தி.மு.க., வினர் சாலை மறியல் செய்துதடுத்தனர். இதனால், அன்று தேர்தல் நிறுத்தப்பட்டது. இரண்டாவது முறையாக கடந்த ஜன., 30ல், நடத்த ஏற்பாடு செய்யப்பட்டநிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வம், சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, தேதி குறிப்பிடாமல், தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டினார். இந்நிலையில், மூன்றாவது முறையாக, புதனன்று தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் அலுவலர் ராமசேகர குப்தா, தேதி குறிப்பிடாமல், மீண்டும் தேர்தலை ஒத்தி வைத்துள்ளார். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X