Advertisement

மாந்தோப்பில் காட்டுயானைகள்; மக்களுக்கு எச்சரிக்கை

பொது மார்ச் 04,2020 | 00:00 IST

Share

ஒசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 6 காட்டுயானைகள் அங்கிருந்து வெளியேறி அருகேயுள்ள சீபம் கிராம மாந்தோப்பில் தஞ்சமடைந்துள்ளன. காட்டுயானைகள் கிராமப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் சீபம் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்த சூளகிரி வனத்துறையினர் காட்டுயானைகள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காட்டுயானைகள் கூட்டத்தில் 2 குட்டிகள் உள்ளதால் அதனை பாதுகாக்க காட்டுயானைகள் கடும் ஆக்ரோஷத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே வனத்துறையினர், சீபம், சாமனப்பள்ளி, தவசானப்பள்ளி, கீரனப்பள்ளி, அலேசீபம், அஞ்சலகிரி, குரும்பரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் வாழும் கிராமமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X