Advertisement

காணாமல் போன சுவாமி சிலை மீட்பு

பொது மார்ச் 04,2020 | 00:00 IST

Share

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள சின்னதும்பூர் செல்லமுத்து மாரியம்மன் கோயில் கருவறையில் இருந்த பழமை வாய்ந்த உற்சவர் சிலை, 5 குத்து விளக்குகள், 6 சொம்புகள் மற்றும் ஒரு கைவிளக்கு ஆகியவற்றை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வேதாரண்யம் மறைஞாயநல்லூர் பொன்னங்காட்டை சேர்ந்த உதயராஜன் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து விசாரணை செய்ததில் கோவிலில் திருடு போன சிலையை திருடியது தெரிய வந்தது.. இதைத் தொடர்ந்து அவரது வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த மாரியம்மன் உற்சவர் சிலை, குத்து விளக்குகள், சொம்புகள் மற்றும் ஒரு கைவிளக்கு ஆகியவற்றை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக உதயராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X