Advertisement

கடல்உயிரினங்கள் ஆன்லைனில் விற்பனை; இருவர் கைது

பொது மார்ச் 04,2020 | 00:00 IST

Share

கடந்த மூன்று மாதங்களாக கடல்வாழ் உயிரினங்கள் ஆன்லைனில் விற்கப்படுவதாக மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விற்பனையில் ஈடுபட்டது, ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பாசூரை சேர்ந்த வீரராஜ்குமார் மற்றும் நகுலேசன் ஆகிய இருவர் என்பது தெரிந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து பவளப்பாறைகளை வாங்குபவராக நடித்து மத்திய வன உயிரின குற்ற தடுப்புபிரிவு ஆய்வாளர் ரங்கேன்தரன் தலைமையிலான குழுவினர் மற்றும் ஈரோடு மாவட்ட வனசர அலுவலர் ரவீந்திரன் இணைந்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிய வகை உயிரினங்களான பவளப்பாறைகள், கடல்விசிறிகள், சிலந்தி சங்கு, மாட்டுத்தலை சங்கு, கோம்பை வடிவ பவள பாறைகள் மற்றும் கடல் பஞ்சுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X