Advertisement

அவங்க வாய்சொல் வீரர்கள் நாங்க செயல் வீரர்கள்

பொது மார்ச் 04,2020 | 00:00 IST

Share

மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர் வழங்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுபட்டி ஏரியில் அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் உபரி நீர் திட்டம் துவக்கி வைத்தது வறலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமைந்துள்ளது , எம்.எல்.ஏ.,வாகவும் அமைச்சர்ஆகவும் இருந்த போது பங்கேற்ற நிகழ்சிகளில் இந்த நிகழ்சியே சிறப்பு வாய்ந்த திட்டம் என்றார். மேட்டூர் உபரி நீர் திட்டம் 11 மாதத்தில் நிறைவேற்றி 100 ஏரிகளிலும் தண்ணீர் நிறப்பப்படும் என உறுதியளித்தார். எதிர்கட்சியினர் வெறும் வாய்சொல் வீரர்கள் நாங்கள் செயல் வீரர்கள் என்பதை சிறப்பான ஆட்சியின். மூலமாக நிரூபித்து வருகிறோம் அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் அதிகாரிகளின் கடின உழைப்பால் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றி மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது அதன் காரணமாக தான் மத்திய அரசு தமிழக அரசுக்கு பல விருதுகளை வழங்கி வருகிறது என்றார். இதுமட்டுமின்றி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள நதிகளை இணைத்து வறண்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல காவூரி குண்டாறு திட்டத்தித்திற்கு ரூபாய் 14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு , கால்வாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X