Advertisement

இந்து என உறுதிமொழி எடுக்கவேண்டும்

பொது மார்ச் 04,2020 | 19:00 IST

Share

இந்த அறநிலையத் துறையில் பணிக்கு சேருவோர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என இந்து அறநிலைய துறை சட்டம் சொல்கிறது. பணியில் சேரும்போது நான் பிறப்பால் இந்து; இந்து மதத்தை பின்பற்றி வருகிறேன் என சுவாமி சிலை முன்பாக நின்று உறுதிமொழி எடுக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு அதிகாரியும் இவ்வாறு உறுதிமொழி எடுப்பதில்லை என ஐகோர்ட்டில் ஸ்ரீதரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தனர். விதிகளின்படி அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைவரும் 8 வாரத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும். வரும் காலங்களில் இந்த விதியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X