Advertisement

வளத்தி அருகே போலி பான தொழிற்சாலை

பொது மார்ச் 04,2020 | 00:00 IST

Share

 விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகன் தாங்கல் கிராமத்தில் டயர் புதுபித்தல் கடை நடத்தி வந்த பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான வீடு மற்றும் கடையில் பாண்டிச்சேரியிலிருந்து மதுபானங்களை கடத்தி வந்து தமிழ்நாடு மதுபான ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்து வந்துள்ளதாக வளத்தி  போலீசாருக்கு கிடைத்த ரகசியதகவலால் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கள்ளதனமாக மதுபானம் கடத்தி வந்த 3 சொகுசு கார்களையும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதில் சென்னை, கடலூர் காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபானங்களும் 24 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்களை பறிமுதல் செய்து கைது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை நேரில் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் தீவிர விசாரணை மேற்கொண்டு சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X