பொது மார்ச் 04,2020 | 20:45 IST
கொரோனா வைரஸ் குறித்து Dean koontz என்ற அமெரிக்க எழுத்தாளர் 1981ல் தனது நாவலில் குறிப்பிட்டிருந்தார். The Eyes of Darkness என்ற புத்தகத்தில், ”சீனா ராணுவ ஆய்வகத்தில் போர்காலத்தில் ஆயுதமாக பயன்படுத்தப்படும் புதிய வைரஸ் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த வைரஸ் ”வூஹான் 400” என்று அழைக்கப்படுகிறது என்று ஒரு கேரக்டர் சொல்வது போல குறிப்பிடப்பட்டிருந்தது. கற்பனை கதையாக இந்த நாவல் எழுதப்படிருந்தாலும், உண்மையில் கொரோனா வைரஸ் பரவி வருவது ஆச்சரியமாக உள்ளது. அதே போல , எழுத்தாளர் lindsay harrison என்பவர் எழுதிய ”sylvia browne end of days” என்ற நாவலில், 2020ஆண்டில் நிமோனியா போன்ற நோய் உலகம் முழுவதும் பரவும். இது நுரையீரலை பாதிக்கும். எந்த டிரீட்மெண்டும் இதை குணப்படுத்த முடியாது. ஆனால் இந்த வைரஸ் பரவுவது ஒரு நாளில் நின்றுவிடும். இன்னும் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் உருவெடுக்கும் . அதன் பின் வரவே வராது. இவ்வாறு 12 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட நாவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விஷயம் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.
வாசகர் கருத்து