Advertisement

இந்து முன்னணி செயலாளர் மீது தாக்குதல்

சம்பவம் மார்ச் 05,2020 | 00:00 IST

Share

கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஆனந்த். கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட பின், அவரும் அவருடைய நண்பரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது ஆனந்த் கோவை ராமநாதபுரம் பகுதியைக் கடந்து குறிச்சி செல்வதற்காக நஞ்சுண்டாபுரம் வழியாக சென்றனர். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆனந்தை இரும்புக்கம்பியால் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். ஆனந்த் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனை முன் திரண்டனர். அசம்பாவித சம்பவம் நிகழாமல் இருக்க 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X