Advertisement

ரேணிகுண்டாவில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சம்பவம் மார்ச் 05,2020 | 16:00 IST

Share

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாடிப்பத்திரியை சேர்ந்த சிவடுக்கும் ரேணிகுண்டாவை சேர்ந்த சுவர்ணலதா 6 மாத குழந்தையுடன் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக பிளாட்பார்மில் தங்கி இருந்தார். கடந்த 2-ம் தேதி மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றதையடுத்து சுவர்ணலாதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருப்பதி டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது. இன்று புத்தூர் ரயில் நிலையம் அருகே அரக்கோணத்தை சேர்ந்த அம்பிகா என்பவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் ரேணிகுண்டாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனக்கு எப்படியாவது ஒரு குழந்தையை வழங்கினால் அதற்கு உண்டான பணத்தை வழங்குவதாக தெரிவித்ததாக அம்பிகா தெரிவித்தார். குழந்தையை மீட்டு சுவர்ணலதாவிடம் வழங்கப்பட்டது. குழந்தை கடத்த ஐடியா வழங்கிய 
மாரியம்மா, சுப்பிரமணி, குமார் , கங்கா மற்றும் குழந்தையை கடத்திய அம்பிகாவை கைது செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X