Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 05-03-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு மார்ச் 05,2020 | 18:00 IST

Share

பைனலில் இந்திய பெண்கள் அணி சிட்னியில் இந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 'டுவென்டி-20' உலக கோப்பை அரையிறுதி நடக்க இருந்தது. கனமழை காரணமாக, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்தானது. லீக் சுற்றில் 'ஏ' பிரிவு புள்ளி பட்டியலில் 'நம்பர்-1' இடம் பெற்றதன் அடிப்படையில், இந்திய அணி பைனலுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. ................ தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டி புளோயம்போன்டைனில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்க அணிக்கு ஜானிமேன் சதம் விளாச, 48.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என கைப்பற்றியது. ................ உலக சாம்பியனை வீழ்த்திய ஹரிகா சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இதன் மூன்றாவது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஹரிகா துரோணவள்ளி, உலக சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜனை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 54வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ............ ஜேமிசன் வாய்ப்பு ஆஸ்திரேலியா செல்லும் நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் 13ல் சிட்னியில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான நியூசிலாந்து அணியில், இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜேமிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் அணியில் இடம் கிடைத்துள்ளது. ..............


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X