Advertisement

கோவையில் கடை அடைப்பு : இந்து முன்னணி

அரசியல் மார்ச் 05,2020 | 00:00 IST

Share

கோவையில் சி.ஏ.ஏ.வை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய இந்து முன்னணி நிர்வாகி ஆனந்தை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டுபேர் தாக்கினர். படுகாயமடைந்த ஆனந்த், தற்போது மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த, மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம், சிஏஏ வால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கூறியும், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், முஸ்லிம்களை, தூண்டி விடுகிறார்கள். இதைவைத்து கலவரம் செய்ய சில பேர் திட்டமிட்டு வருகின்றனர். எனவே, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உளவுத்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். ஆனந்த் தாக்கப்பட்டதை கண்டித்து, இந்து அமைப்புகள் சார்பில், கோவை முழுவதும், கடையடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X