பொது மார்ச் 05,2020 | 19:15 IST
கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் , காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைரஸ் பரவும் அச்சத்தால் ஹைதராபாதில் 3 வழித்தடங்களில் இயக்கப்பட்டும் மெட்ரோ ரயில்களில் 20 ஆயிரம் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள மெட்ரோ ரயிலில் பயணிகள் தொடக்கூடிய ஒவ்வொரு பகுதிகளும் ஆர்.2 என்னும் ரசாயனம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பான பயணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை தவிர்ப்பதற்காக க்யூ ஆர் கோடு பாஸ் வாழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து