பொது மார்ச் 07,2020 | 14:00 IST
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையி ல் , உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு , நேரு யுவகேந்திரா சார்பில் , சாதனை படைக்கும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக , விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் யோகா பயிற்சியாளர் கல்பனா, என்பவர் தலை முடியில் கட்டி 2 டன் எடையுள்ள காரை இழுத்து சென்று , பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்று , அருணாசலே வரர் கோவிலில் இருந்து , பூ மார்க்கெட் வரை 250 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றார் . ஸ்ரீமத் சிதம்பர சோனாசல சுவாமி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் டி.எஸ்.பி அண்ணாதுரை, நேரு யுவகேந்திரா கணக்காளர் கண்ணகி, விவேகானந்தா யோகா - ஸ்கேட்டிங் கழக தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று , கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டுகள் தெரிவித்தனர். மேலும் , சாதனை பெண்மணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
வாசகர் கருத்து