Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 05-03-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு மார்ச் 07,2020 | 18:20 IST

Share

கோப்பை வெல்லுமா இந்தியா ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மார்ச் 8ல் மெல்போர்னில் நடக்கவுள்ள பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் உள்ளிட்டோர் அசத்தினால் இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பை வெல்லலாம். .................. குன்னேஸ்வரன், ராம்குமார் தோல்வி குரோஷியாவின் ஜாகெரப்பில் நடக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ், பைனல்ஸ் தகுதிச்சுற்றில் இந்தியா, குரோஷியா அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இந்தியாவின் குன்னேஸ்வரன், போர்னாவிடம் வீழ்ந்தார். இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், நட்சத்திர வீரர் மரின் சிலிச்சிடம் வீழ்ந்தார். ............... அரையிறுதியில் சோபியா பிரான்சின் லியான் பகுதியில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் சோபியா கெனின், பிரான்சின் டாடினை சந்தித்தார். அபாரமாக விளையாடிய சோபியா 6-1, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். ............ வாசிம் ஜாபர் ஓய்வு இந்திய அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். 42 வயதான துவக்க வீரரான இவர், 31 டெஸ்ட், 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். மும்பை, விதர்பா அணிக்காக முதல் தர போட்டிகளில் பங்கேற்றார். ரஞ்சி டிராபி, இரானி கோப்பை உள்ளூர் தொடர்களில் அதிக ரன் குவித்த வீரர். தற்போது, அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். ..............


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X