Advertisement

பள்ளியில் 'பார்லிமென்ட்' தேர்தல்

பொது மார்ச் 07,2020 | 00:00 IST

Share

திருச்சி, மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடத்தப்பட்டது. 9 மாணவ, மாணவிகள், வேட்பாளர்களாக போட்டியிட்டனர். வாக்குச்சாவடி, பெயர் மற்றும் அடையாள அட்டை சரிபார்ப்பு, மை வைத்தல் என நிஜ தேர்தலில் கடைபிடிக்கப்படும் அத்தனை நடைமுறைகளும் இதிலும் இடம்பெற்றன. வாக்குப்பதிவு இயந்திரத்தில்தான் மாணவ, மாணவிகள் வாக்காளர்களாக வாக்களித்தனர். தேர்தல் முடிந்த பின், வாக்கு இயந்திரம் சீ்ல் வைக்கப்பட்டு, பின் வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. மாணவ வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி பதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து பதவியேற்பு விழாவும், பார்லிமென்ட் கூட்டமும் நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் தொடர்பான புரிதலை ஏற்படுத்த, இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X