Advertisement

ஆர்.சுப்புலட்சுமி படத்திற்கு முதல்வர் மலரஞ்சலி

பொது மார்ச் 07,2020 | 00:00 IST

Share

திருச்சி 'தினமலர்' பங்குதாரர், அமரர் ஆர்.ராகவன் மனைவியும், 'தினமலர்' திருச்சி, வேலுார் பதிப்புகளின் ஆசிரியர், முனைவர் ஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோரின் தாய் ஆர். சுப்புலட்சுமி, பிப்ரவரி 27ம் தேதி காலமானார். திருச்சி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள, ஆர்.சுப்புலட்சுமியின் உருவப்படத்துக்கு, பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருச்சி வந்த, முதல்வர் பழனிசாமி, ஆர்.சுப்புலட்சுமி இல்லத்தில், அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். ஆர்.ராமசுப்பு, ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோருக்கு, ஆறுதல் கூறினார். 'தினமலர்' பங்குதாரர், ஆர்.லட்சுமிபதி, 'தினமலர்' மதுரை பதிப்பு வெளியீட்டாளர், எல்.ராமசுப்பு ஆகியோர் உடனிருந்தனர். முதல்வருடன், அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர், கலெக்டர் சிவராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X