Advertisement

103 வயது பெண்ணுக்கு நாரி சக்தி விருது

பொது மார்ச் 08,2020 | 14:41 IST

Share

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் எனப்படும் மகளிர் சக்தி விருது வழங்கும் விழா, ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. உலகளவில் தடகளப் போட்டிகளில் கலக்கி வரும் 103 வயது பாட்டி மன் கவுர் உட்பட பல பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மகளிர் சக்தி விருதுகளை வழங்கி பாராட்டினார். சண்டிகரைச் சேர்ந்த மன் கவுர் 93வது வயதில் அத்லெட்டிக் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கி உலகளவிலும் தேசிய அளவிலும் பல பதக்கங்களை வென்றவர். உலகின் அதிவேக நூறு வயது பெண் என்ற சாதனையையும் படைத்தவர். இவரைத் தவிர, இந்திய விமானப்படையின் முதல் பைலட்டுகளான மோஹனா, அவானி, பாவனா உள்ளிட்ட பல பெண்களுக்கும் ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X