Advertisement

இத்தாலியில் நடமாட 1.6 கோடி பேருக்கு கட்டுப்பாடு

பொது மார்ச் 08,2020 | 18:08 IST

Share

கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகளவில் 1 லட்சத்து 07490 ஆக உயர்ந்துள்ள நிலையில், சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 233 பேர் இறந்துள்ளனர். வடக்கு இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 1247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இத்தாலி பிரதமர் ஜியூசாப்பி காண்டே Giuseppe Conte ஞாயிறு காலை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். லம்பார்டி, Lombardy வெனிஸ் Venice உள்ளிட்ட 15 மாகாணங்களில் மக்கள் நடமாட்டத்துக்கும் பொது இடங்களில் கூடவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில நகரங்கள் சீலிடப்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறவும் நுழையவும் முடியாது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், ஜிம்கள், அருங்காட்சியகங்கள் பனிச்சறுக்கு ரிசார்ட்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இத்தாலி அரசின் அதிரடி உத்தரவு, 1.6 கோடி பேரின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X