Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 08-03-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு மார்ச் 08,2020 | 19:00 IST

Share

உலக கோப்பையை நழுவவிட்டது இந்தியா ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை பைனல் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஹீலே, மூனே அரை சதம் விளாச, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு ஷபாலி, மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் ஏமாற்றினர். இந்திய அணி 19.1 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஆஸ்திரேலியா ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ............. இந்திய பெண்கள் அணி சாதனை துபாயில், பெண்களுக்கான பெடரேஷன் கோப்பை டென்னிஸ் 'ஆசிய-ஓசியானா குரூப்-1' சுற்று நடக்கிறது. ஐந்தாவது லீக் போட்டியில் இந்திய அணி, இந்தோனேஷியாவை சந்தித்தது. சானியா, அன்கிதா அசத்த இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில், 2வது இடம் பிடித்த இந்தியா முதல் முறையாக 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறி சாதித்தது. ............ சச்சின் அணி வெற்றி ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும், 'ரோடு சேப்டி வேர்ல்டு சீரிஸ்' தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் 'லெஜண்ட்ஸ்' அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. இந்திய 'லெஜண்ட்ஸ்' அணிக்கு சேவக் 74 ரன்கள் விளாசினார். கேப்டன் சச்சின் 36 ரன்கள் எடுக்க, அணி 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ............... ஷிவ்டோலினா முன்னேற்றம் மெக்சிகோவின் மான்டெர்ரி பகுதியில் பெண்களுக்கான சர்வதேச ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் அரையிறுதியில் உக்ரைனின் எலினா ஷிவ்டோலினா, நெதர்லாந்தின் ஆர்ன்ட்க்சாவுடன் மோதினார். துடிப்பாக விளையாடிய ஷிவ்டோலினா 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். ...............


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X