Advertisement

தம்பதி உட்பட 3 பேர் கொலை: 4 பேருக்கு வலை

சம்பவம் மார்ச் 09,2020 | 00:00 IST

Share

சேலம், திருமலைகிரி அடுத்த செம்மண்திட்டில் தங்கராஜ் என்பவரின் வெள்ளிப்பட்டறையில், ஆக்ராவை சேர்ந்த ஆகாஷ் - வந்தனா தம்பதியும், ஆகாஷின் உறவினர் சன்னியும் ஒரு வாரத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்திருந்தனர். தங்கராஜுக்கு சொந்தமான வீட்டில் தங்கிருந்த இவர்கள் மூவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். தங்கராஜின் வெள்ளிப்பட்டறையில், ஆக்ராவை சேர்ந்த நண்பர்களான வினோத், தினேஷ், சுராஜ், விஜி ஆகிய நான்கு பேரும் வேலை செய்து வந்தனர். ஆகாஷ் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர் வீட்டில் தங்கியிருந்த 4 பேரும், ஞாயிறன்று ஆகாஷுடன் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வினோத் உள்ளிட்ட நாண்பர்கள் நான்கு பேரும், ஆகாஷ் குடும்பத்தினரை கொலை செய்து இருக்கலாம் என்று இரும்பாலை போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிய 4 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X