Advertisement

நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த இடைக்கால தடை

சினிமா வீடியோ மார்ச் 10,2020 | 18:22 IST

Share

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்தாண்டு ஜூன் 23ல் தேர்தல் நடந்தது. பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் எண்ண தடை விதிக்கப்பட்டிருந்தது. பின் ஜன.,24ல் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் நடிகர் சங்க தேர்தல் செல்லாது, மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட்டப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று(மார்ச் 10) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மறு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும், விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 8க்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை தனி அதிகாரியே சங்கத்தை நிர்வகிக்கலாம் என உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X