Advertisement

போர்மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா

ஆன்மிகம் வீடியோ மார்ச் 11,2020 | 00:00 IST

Share

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ போர்மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 188-ஆம் ஆண்டு திருவிழா ங நடந்தது. முதல் நாளான மார்ச் 7-ம் தேதி இரவு விநாயகர் ஊர்வலமும், 8-ம் தேதி இரவு பாலமுருகன் ஊர்வலமும், 9-ம் தேதி இரவு பராசக்தி ஊர்வலமும் நடந்தது. தொடர்ந்து 10ம் தேதி இரவு 4-வது நாள் திருவிழாவில் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன் சாமிதரிசனம் செய்தனர். அப்போது செய்யார் எம்.எல்.ஏ., தூசி.மோகன், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் பரிவரத தேவதைகள் ஊர்வலம், வாணவேடிக்கையும், மகா கும்பமும், அருள்வாக்கும் விமர்சியாக நடைபெற்றது. இந்த மகா கும்பத்தில் குழந்தை இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் இதனால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு படையலிட்ட சாதத்தை வாங்கி சாப்பிட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X