Advertisement

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகாரிகள் விசாரணை

பொது மார்ச் 12,2020 | 00:00 IST

Share

மயிலாடுதுறை, நல்லடை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 136 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் நாராயணபிரசாத் தலைமை ஆசிரியரின் அனுமதியின்றி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். வேனில் சென்ற போது மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதுபற்றி யாரிடமாவது தெரிவித்தால் பிராக்டிக்கல் தேர்வு மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன் என மிரட்டி, சத்தியம் வாங்கிக்கொண்டதாக மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் இளவரசன் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரனையை தொடங்கியுள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X