Advertisement

மீனவ பெண்கள் தீக்குளிக்க முயற்சி

பொது மார்ச் 12,2020 | 00:00 IST

Share

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும், அதனை கேட்ட வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. மீனவர்களின் மோதலில் இரு கிராமத்தை சேர்ந்தவர்கள் 17, க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மீன் துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையில் டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நாகை துறைமுகம் பகுதியில் வலைகளை பறிமுதல் செய்ய சென்றனர். அப்போது போலீசாரை தடுத்து நிறுத்திய கீச்சாங்குப்பம் மீனவப் பெண்களும் மீனவர்களும், வலைகளை பறிமுதல் செய்ய விடமாட்டோம் என கூறி தலையில் மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினருக்கும் மீனவர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வலைகளை பறிமுதல் செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி மீனவப் பெண்கள் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் நாகை துறைமுகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X