Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 12-03-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு மார்ச் 12,2020 | 20:50 IST

Share

ஐ.பி.எல்., தொடருக்கு சிக்கல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா வரும் வெளிநாட்டினருக்கான விசாவை, வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் மார்ச் 29ம் தேதி துவங்கும் ஐ.பி.எல்., தொடரில் அன்னிய வீரர்கள் 60 பேர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ---------------------------- செய்னா நேவல் தோல்வி இங்கிலாந்தில் 'ஆல் இங்கிலாந்து ஓபன்' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல், ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் 11-21, 8-11 என, தோல்வியடைந்தார். ----------------------------- தனிமையில் குத்துச்சண்டை நட்சத்திரங்கள் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை தொடருக்காக இந்திய நட்சத்திரங்கள், கொரோனா பாதிக்கப்பட்ட இத்தாலியில் பயிற்சி பெற்றனர். அங்கிருந்து ஜோர்டனில் நடந்த தொடரில் பங்கேற்று நாடு திரும்பினர். இவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற போதும் அடுத்த சில நாட்களுக்கு தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ------------------------------ சென்னை சிட்டி 'டிரா' ஆசிய கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் குரூப் அளவிலான போட்டிகள் தற்போது நடக்கின்றன. 36 அணிகள் மோதும் இதில் 11 அணிகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறும். கடந்த சீசன் 'ஐ-லீக்' தொடர் சாம்பியன், தமிழகத்தின் சென்னை சிட்டி அணி 'இ' பிரிவில் உள்ளது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை சிட்டி அணி 2-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவின் மஜியா அணியுடன் 'டிரா' செய்தது. ------------------------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X