Advertisement

விஜய் சம்பளம்: வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சினிமா வீடியோ மார்ச் 13,2020 | 20:30 IST

Share

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். சமீபத்தில் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் லலித் குமாரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நடிகர் விஜய் பிகில் படத்திற்கு ரூ.50 கோடியும், மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியும் சம்பளம் பெற்றுள்ளதாக தெரிவித்தனர். அந்த தொகைக்கு அவர் வருமான வரி செலுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X