Advertisement

கொரோனா பலி 5,000ஐ தாண்டியது

பொது மார்ச் 13,2020 | 18:51 IST

Share

னாவில் துவங்கிய கொரோனாவைரஸ் இதுவரை 100க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. வெள்ளி மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் 1 லட்சத்து 38 ஆயிரத்து 240 பேர் கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், 70 ஆயிரத்து 718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 5081 பேர் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் இன்னும் 62,441 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 5,759 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதிகப்படியாக சீனாவில்தான் 3177 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 1016 பேரும், ஈரானில் 514 பேரும், ஸ்பெயினில் 91 பேரும், தென்கொரியாவில் 71 பேரும், பிரான்ஸில் 61 பேரும், அமெரிக்காவில் 41 பேரும் உயிரிழந்துள்னர். இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X