பொது மார்ச் 13,2020 | 19:45 IST
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகம் முழுவதும் 1 லட்சத்து 38 ஆயிரத்தி 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். 70,719 பேர் குணம் அடைந்துள்ளார். 5082 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் புதியதாக இன்று 7 பேருக்கு கோரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கர்நாடகவை 76 வயது முதியவர் இறந்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரேகோயருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிய சார்க் தலைவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருநள்ளாறு கோயில் உப்பட பிரபல கோயில்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காய்சல் அறிகுறி இருக்கும் பக்தர்கள் வரவேண்டம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அச்சத்தால் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. ஐபிஎல் போட்டிகளில் மார்ச் 29ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
வாசகர் கருத்து