Advertisement

மதுரையில் மாநில கபடி போட்டி

பொது மார்ச் 14,2020 | 00:00 IST

Share

மதுரை தமுக்கம் மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டியை, அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டு துறை வீரர், வீராங்கனைகளுக்கு தரப்படும் அரசு வேலை வாய்ப்பு 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில், 37 மாவட்டங்களைச் சேர்ந்த 77 ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு அணிகள் பங்கேற்கின்றன. வெற்றி பெறும், முதல் மூன்று அணிகளுக்கு, தலா 1 லட்சம், 75 ஆயிரம் மற்றும் 50ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X