Advertisement

கொரோனா தாக்கம்: ஐ.டி நகரான தேனி | IT office moved to theni from bangalore | Theni | Dinamalar

சிறப்பு தொகுப்புகள் மார்ச் 14,2020 | 00:00 IST

Share

சில்லுனு ஏசி ரூம், ைஹ பை (highfi) டேபிள், சேர், மாடர்னா லேப்டாப்… மதியத்துக்கு பீட்சா, பர்கர்னு வாழ்ந்துட்டிருந்த பெங்களூரு ஐ.டி. பசங்க, கொரோனா பீதியில், வேலை வேண்டாம்னு, ஓடத்துவங்கிட்டாங்க. பத்தாண்டு கால உழைப்பு மற்றும் சேமிப்பில், பெங்களூருவில் ஐ.டி நிறுவனம் நடத்தி வந்த, தேனியைச் சேர்ந்த அரவிந்துக்கும் கொரோனா பெரிய இடியை இறக்கியது. அமெரிக்க நண்பர் கேப்ரியல் ஆப்பிள்டன், அரவிந்த் ரெண்டு பேரும் சேர்ந்து, 'இன்ஸ்டாகிளீன்' என்ற 'ஆண்ட்ராய்டு' ஐ.ஓ.எஸ்., செயலியை உருவாக்கும் 
'ஸ்டார்ட்அப்' நிறுவனத்தை பெங்களூருவில் நடத்திட்டு வந்தாங்க. அங்க, 20 பேர் வேலை பார்த்த நிலையில், ரெண்டு வாரத்துக்கு முன்னால, கொரோனா பீதி பரவ ஆரம்பிச்சுது. நிறுவனத்திற்கு விடுமுறை விட்டு, சொந்த ஊரான தேனி மாவட்டம் தேவாரத்திற்கு வந்த அரவிந்த், இங்கேயே வேலை செஞ்சா என்ன னு யோசிக்க ஆரம்பிச்சுருக்கார். இதுக்கு முன்னால, நெதர்லாந்தில் வேலை பார்த்தப்போ, அங்கே, பண்ணை கிராமங்களில், இதுமாதிரி ஐ.டி. கம்பெனிகள் செயல்படுவதை பார்த்துள்ளார் அரவிந்த். லேப்டாப், வை பை வசதியுடன் கூடிய கிராமம் இருந்தால் போதும்னு, தனது ஊழியர்கள் 12 பேரை, தேனிக்கு வரவழைத்துள்ளார். பாராட்ட : 99409 77931


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X