Advertisement

கோழிக்கறி சாப்பிடுங்க: கொரோனா போயிரும் | Chicken Price Down Due to Corona Virus | Dinamalar

சிறப்பு தொகுப்புகள் மார்ச் 15,2020 | 00:00 IST

Share

கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது, மட்டன், சிக்கன், மீன் என, இறைச்சி வகைகளை குறிவைத்து, வலைதளங்களில் தாக்குதல் உலா வருகிறது. சைவத்துக்கு சப்பை கட்டும் கும்பல் செய்ற வேலையா... இல்ல, அதிகவிலையில், சிக்கன், மட்டன் வாங்க முடியாத ஆத்திரத்தில்... வதந்தி பரப்பும் கும்பலோட கைங்கர்யமா னு தெரியல. சரியா... தப்பா னு ஆராய்ச்சி பண்ற அளவுக்கு நம்மாளுகளுக்கு டைம் இல்ல. அதனால... வர்ற மெசேஜ் எல்லாத்தையும் படிக்காமலே பார்வேர்டு பண்ணிட்டிருக்கோம். நியூஸ் பேப்பர் படிக்க நேரமில்லைனு சொல்லிட்டு, இந்த வதந்தி மெசேஜை மாஞ்சு மாஞ்சு படிச்சுட்டு, திடீர் சைவத்துக்கு மாறினவங்க நிறைய பேர். மனுஷனுக்காக தீனி போட்டு மளமள னு கோழி வளர்த்து வச்சா... எல்லாமே வதந்தியால, விலை போகாம கூண்டுக்குள்ளேயே முடங்கி போச்சு. முதலீடு போட்டவங்களும் முடங்கி போற அளவுக்கு, வதந்தி... தீயா வேலை செஞ்சுருக்கு. கிலோ 300 ரூபாய் வரை கெத்து காட்டிய சிக்கன், இப்போ, 22 ரூபாயாக குறைஞ்சு போச்சு.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X