Advertisement

கூடலூர் தம்பதிக்கு கொரோனா இல்லை

பொது மார்ச் 16,2020 | 00:00 IST

Share

கூடலூரில் இருந்து, காய்கறி வியாபாரத்திற்காக, கேரள மாநிலத்திற்கு சென்று வந்த, தம்பதியர், ஒரு வாரமாக, காய்ச்சல், இருமல், சளியால் அவதிப்பட்டனர். அவர்களின் சுவாசக் குழாய் வறண்ட நிலையில் இருந்ததோடு, நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருந்தது. இவர்களை பரிசோதித்த கம்பம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், தேனி அரசு மருத்துவமனைக்கு, பிரத்யேக ஆம்பலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்குள்ள கொரோனா தனிமை வார்டில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு 'ஸ்வாப்' பரிசோதனை செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்தனர். இருவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை முடிவில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை எனத் தெரிந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதேபோல, கேரளாவில் சமையல் வேலைக்கு சென்ற வந்த மற்றொரு பெண், தொடர் இருமல், சளி காய்ச்சலால், அவதிப்பட்டதால் கொரோனா இருக்கலாம் என சந்தேகத்தில், கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட அப்பெண்ணுக்கு, காசநோய் என பரிசோதனையில் உறுதி ஆனதை அடுத்து, டாக்டர்கள் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள மக்களிடம், கொரோனா வைரஸ், பீதியை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X