Advertisement

கான்கிரீட் படகு போட்டி

விளையாட்டு மார்ச் 16,2020 | 00:00 IST

Share

ஈரோடு, சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியும், அமெரிக்க கான்கிரீட் சங்கத்தின், இந்திய பிரிவும் இணைந்து நான்கு நாள் கருத்தரங்கு நடத்தின. இந்த கருத்தரங்கின் ஒரு பகுதியாக கான்கிரீட்டை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட படகுகளுக்கான போட்டி நடந்தது. தேசிய அளவில், 20 அணிகள் பங்கேற்றன. இப்படகு மிக உறுதியானது. இலகுரக தன்மையுடையது. அழுத்தம், காற்று ஆகியவற்றால் சேதமடையாது. மாணவர்கள் வடிவமைத்த இப்படகுகள், படகின் உறுதிதன்மை, அழுத்தம், நீரில் மூழ்கும் தன்மை, பயணம், எடை மற்றும் பயணிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்படும் குழு, அமெரிக்காவில் நடக்க உள்ள சர்வதேச போட்டிக்கு தகுதி பெறுவார்கள்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X