பொது மார்ச் 17,2020 | 17:18 IST
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடந்தது . சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் சர்வதேச மருத்துவ வல்லுனர்களுடன் கலந்துரையாடினர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தாலும் மீண்டும் அவருக்கு தொற்று வர வாய்ப்பிருப்பதாக, சர்வதேச மருத்துவர்கள் கூறினர் என்றார். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கக்கூடாது; தொற்றும் பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்'' எனவும் விஜயபாஸ்கர் கூறினார்.
வாசகர் கருத்து