விளையாட்டு மார்ச் 17,2020 | 19:59 IST
கோஹ்லி போல வருமா இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி குறித்து முன்னாள் வீரர் மதன்லால் கூறுகையில்,'' களத்தில் கோஹ்லி ஆக்ரோஷமாக செயல்படுவது குறித்து சிலர் விமர்சனம் செய்கின்றனர். என்னைப்பொறுத்தவரையில் இந்த செயலை விரும்புகிறேன். இப்படிப்பட்ட கேப்டன்தான் இந்திய அணியை வழிநடத்த வேண்டும். நியூசிலாந்து தொடரில் ஏமாற்றினாலும், கோஹ்லிதான் சிறந்த வீரர்,'' என்றார். ............. பாகிஸ்தான் லீக் ஒத்திவைப்பு பாகிஸ்தானில் சூப்பர் லீக் பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 'நாக் அவுட்' சுற்றுப்போட்டிகள் இன்று துவங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் பரவி வருவதால், தொடரை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. மாற்றப்பட்ட அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .......... டைகர் உட்ஸ் அறிவுறுத்தல் கொரோனா வைரஸ் விளையாட்டுத்துறையை பாதித்துள்ளது. அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,' கோல்ப் போட்டியை விட, மனிதர்களின் உடல்நலமே முக்கியம். கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார். ............... கொரோனா பாதிப்பு: கால்பந்து பயிற்சியாளர் மரணம் ஸ்பெயினின் அத்லெடிகோ போர்ட்டடா ஆல்டா என்ற யூத் கால்பந்து அணி பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா. 21 வயதான இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில், இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. சிகிச்சை பலன் தராத நிலையில் கார்சியா மரணமடைந்தார்.
வாசகர் கருத்து