Advertisement

குமரி மாவட்ட குட்கா சப்ளையர் கைது

பொது மார்ச் 18,2020 | 00:00 IST

Share

குமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பதுக்கி வைத்திருப்பதாக, கோட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தை, போலீசார் ஆய்வு செய்தனர். அங்கிருந்த 500 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் மற்றும் 7 லட்ச ரூபாயை, பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நாகர்கோவில் ஏடிஎஸ்பி ஜவஹர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். காட்டுப்புதூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரையும், அவருக்கு உதவியாக இருந்த மூன்று பணியாளர்களையும் கைது செய்தனர். இந்த ஆறுமுகம்,  குமரி மாவட்டம் முழுவதும், குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை சப்ளை செய்து வந்தவர் என்பது தெரியவந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X