Advertisement

வழக்கில் இருந்து தப்பிக்க கொரோனா நாடகமா

பொது மார்ச் 18,2020 | 00:00 IST

Share

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். 26 வயதான இவர், கேரளாவில் வேலை பார்த்த போது, ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அதன்பின், வேலைக்காக, ஜெர்மனி சென்ற நிலையில், அந்தப் பெண்ணின் தொடர்பை துண்டித்துள்ளார். இந்நிலையில், எட்டு நாட்களுக்கு முன், ஜெர்மனியில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர், ஊர் திரும்பியதை அறிந்த, அந்த பெண், கேரள மாநிலம் பாலக்காடு ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து, திருச்சி கொளக்குடி கிராமத்திற்கு வந்த கேரள போலீசார், சந்தோஷ்குமாரிடம் விசாரித்தனர். அப்போது, போலீசாரிடம் தனக்கு கொரானோ வைரஸ் காய்ச்சல் அறிகுறி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், சந்தோஷ் குமாரை கைது செய்யாமல், அப்பனநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக, அனுப்பி வைத்தனர் . அவருக்கு கொரானோ வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பதை கண்டறிய, திருச்சியில் இருந்து சிறப்பு ஆம்புலன்சை, டாக்டர்கள் வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருந்த போது, பாத்ரூம் செல்வதாக கூறிய சந்தோஷ்குமார், தப்பியோடினார். இதனால் டாக்டர்களும் கேரள மற்றும் தமிழக போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது குடும்பத்தினரை விசாரிக்க சென்ற போது, அவர்களும் தலைமறைவாயினர். போலீசார் கைது செய்வதில் இருந்து தப்பிக்க, சந்தோஷ்குமார், கொரோனா வைரஸ் நாடகமாடினாரா அல்லது உண்மையிலேயே பாதிப்பு உள்ளதா என இரு மாநில போலீசாரும், டாக்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். கேரள போலீசார் ஊர் திரும்பிய நிலையில், தமிழக போலீசார் மட்டும் சந்தோஷ் குமாரை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X